சாமானிய நிலையிலிருந்து செல்வம் ஈட்டி பெரும் செல்வந்தன் ஆனவன் ஒருவன். உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகிறான். அவனது குடும்பம் அவனை பாரமாக நினைக்கிறது. மரணம் மிக விரைவில் அவனை அழைத்துக் கொள்கிறது. மரணித்தவன் ஈட்டிய செல்வத்தில் கணிசமான அளவு கடனும் இருக்கிறது. கடன் செல்வத்தை ஈடு செய்து விடுகிறது. இதுவே தி.ஜா வின் அத்துவின் முடிவு கதை.