கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னுடன் விளையாடிய போது
வீதிகள்
எல்லா உலகங்களாகவும் ஆயின
ஓடி வந்தோம்
ஓடிப் போனோம்
திரண்டோம் பிரிந்தோம்
மாயாவிகளாக உணர்ந்து கொண்டோம்
உன்னுடனான விளையாடல்களில்
விளையாடல் மட்டுமே இருந்தது கிருஷ்ணா
வெற்றி தோல்விகள் இல்லை
நீ
இக்கணமும்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்
முடிவே இல்லாத விளையாட்டை