Thursday, 24 April 2025

ஒப்புகைச் சீட்டு விவகாரம் - அஞ்சல்துறை இயக்குநர் பதில்

 ஒப்புகைச்சீட்டு விவகாரம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் அளித்த சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை கோரியிருந்தேன். அது பல அலுவலகங்கள் தொடர்புடையதாக இருப்பதால் அதனை வழங்க இயலவில்லை என்று பதில் கிடைக்கப் பெற்றது. அந்த பதில் கிடைக்கப் பெற்றதும் திருச்சிராப்பள்ளியில் உள்ள போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் மேல்முறையீடு செய்தேன். இன்று அவரிடமிருந்து பதில் வந்தது. நான் கோரியிருந்த கோப்பின் விபரங்களை ஒரு வாரத்துக்குள் எனக்கு அளிக்குமாறு மயிலாடுதுறை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.