Friday, 1 August 2025

கிராமத்துக்கான பொதுப்பணிகள் - செயல்திட்டம் (நகைச்சுவைக் கட்டுரை)

’’கிராமத்துக்கான பொதுப்பணிகள்’’ பதிவை வாசித்து விட்டு தம்பி ஃபோன் செய்தான். ‘’அண்ணன் ! நீங்க என்ன ஐ-பேட் வாங்கலாம் என யோசிக்கறத்துக்குள்ள என்னென்ன ஒர்க் செய்ய விரும்புறீங்கன்னு லிஸ்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க’’ 

‘’நான் அப்படித்தான் தம்பி இருக்கன்’’

‘’நீங்க பிளான் செஞ்சிருக்கறது எல்லாமே பெரிய விஷயங்கள்’’

‘’என்னோட பிளான் இல்ல தம்பி. நம்மோட பிளான்’’

‘’அப்படி சொல்றீங்களா?’’

‘’நாம் முன்வச்சிருக்கற விஷயத்தை ஒரு துவக்கப் புள்ளியா எடுத்துக்கிட்டு அதை இன்னும் ஃபைன் டியூன் செய்யணும். டிஸ்கஸ் செய்யணும்’’

’’கிராமத்துல இருக்கற குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு மைதானம் இந்த விஷயம் எல்லாருமே ஏத்துப்பாங்க. சப்போர்ட் பண்ணுவாங்க’’

‘’நல்ல விஷயம்’’

’’நிறைய லாங்வேஜ் சொல்லித் தரணும்னு சொல்றீங்க. அந்த ஐடியாவுக்கு ரெஸிஸ்டன்ஸ் இருக்கலாம். ‘’

‘’நாம கிராமத்துல இருக்கற ஒரு குழந்தை விரும்புன மொழியை படிக்க வாய்ப்பு இருக்கணும்னு நினைக்கறோம். என்னோட விருப்பம் என்னன்னா நாம ஒர்க் பண்ற ஊர்ல தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், ஹிந்தி, ஜப்பானிஸ், அரபி, ஃபிரஞ்ச், இங்கிலிஷ் னு நிறைய மொழி படிக்க வாய்ப்பு இருக்கணும். ரெண்டுலேந்து மூணு வருஷம் தொடர்ந்து படிச்சா ஒரு லாங்வேஜ்ஜோட எழுத்தறிவும் வாசிப்பறிவும் வந்துடும். அதுக்கப்பறம் அவங்களே அதை இம்ப்ரூவ் பண்ணிப்பாங்க’’

‘’உங்க ஐடியா நல்லா இருக்கு . புதுசா இருக்கு. ஆனா நிறைய மொழி படிக்கறது கஷ்டம் இல்லையா?’’

‘’மொழியைக் கத்துக்கறது மனுஷ மூளைல இருக்கற சில பகுதிகள். நிறைய மொழி கத்துக்கும் போது அந்த பகுதி தீவிரமான தூண்டுதலுக்கு ஆளாகும். அது குழந்தைகளுக்கு நல்ல விஷயம் தான். இது மார்க்குக்காக படிக்கற விஷயம் இல்ல. அவங்க பர்சனாலிட்டியை தீர்மானிக்கற விஷயம். நம்ம நாட்டுல நம்ம மரபுல நிறைய மொழி தெரிஞ்சுக்கற ஒருத்தர் சரஸ்வதியோட ஆசிர்வாதம் உள்ளவர்னு சாதாரண கிராம மக்களுக்கு நல்லாவே தெரியும்’’

‘’உங்க ஆங்கிள் புதுசு அண்ணன்’’

‘’இப்ப நாம மலையாளம் சொல்லித் தரோம்னு வச்சுக்கோ. நம்ம நாட்டுல கடந்த 100 வருஷத்துக்கு மேல கல்வியறிவு அதிகமா இருக்கற மாநிலம் கேரளம். அதோட விளைவு என்னன்னா உலகத்துல உள்ள எல்லா மொழியோட முக்கியமான படைப்புகளும் மலையாளத்துல மொழிபெயர்க்கப்பட்டு இருக்கு. நீ உலக இலக்கியம் படிக்கணும்னா உனக்கு மலையாளம் தெரிஞ்சா எல்லாத்தையும் மலையாளத்துல படிச்சுடலாம். வெட்டம் மாணி ன்னு ஒருத்தர். அவர் ஒரு சிரியன் கிருஸ்தவர். ‘’புராணக் கலைக்களஞ்சியம்’’ ஒரு என்சைக்ளோபீடியாவை மலையாளத்துல எழுதியிருக்காரு. மாஸ்டர் பீஸ் அந்த ஒர்க்’’

‘’இத எல்லாரும் புரிஞ்சுப்பாங்களா?’’

‘’பத்து பேர் ஐம்பது பேர் நூறு பேர் சேந்து பல மொழிகளைக் கத்துக்க ஆரம்பிச்சாலே இதெல்லாம் தானா நடக்கும்’’

‘’சமஸ்கிருதம் எதுக்கு?’’

‘’சமஸ்கிருதம் படிச்சா நிறைய இந்திய மொழியோட ஈஸியா கனெக்ட் ஆகிட முடியும். உதாரணம் : ஹிந்தி, மலையாளம். ஒருத்தருக்கு சமஸ்கிருதம் தெரியும்னா அவர் ஈசியா ஹிந்தி மலையாளம் கத்துப்பார்’’

‘’அரபி எதுக்கு?’’

‘’அரபி ஒரு கிளாஸிக் லாங்வேஜ். ஆயிரம் மற்றும் ஓர் அராபிய இரவு அரபு மொழில தான் இருக்கு’’

‘’ஜப்பானிஸ் எதுக்கு?’’

’’ஜப்பான் கலை உணர்வு மிக்க சமுதாயம். அந்த கலை உணர்வு நமக்கும் தேவை’’ 

‘’அண்ணன் ! கிராமத்துல நாம ஒரு ஸ்கூல் நடத்தறதுக்கு சமமான காரியம் நீங்க சொல்றது ‘’

‘’ஸ்கூல் னு சொல்லலாம். அதுல நான் ஒரு விஷயம் ஃபைன் டியூன் செய்யறன். என்னன்னா நம்ம ஊர்ல ஸ்கூல் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்க்கு அதிக செலவு செய்யறாங்க. டீச்சர்ஸ் சேலரி குறைவா இருக்கும். அதான் இங்க உள்ள பேடர்ன். உதாரணத்துக்கு 200 அல்லது 300 ஸ்டூடண்ட்ஸ் படிக்கற ஸ்கூல் கட்ட  ஒரு ஏக்கர் இடம் வாங்க ஐம்பது லட்சம் வரைக்கும் செலவு பண்ணுவாங்க. அதுல கிளாஸ் ரூம் கட்ட ஐம்பது லட்சத்தில இருந்து ஒரு கோடி வரைக்கும் செலவாகும். மொத்த பட்ஜெட் ஒன் பாயிண்ட் ஃபைவ் குரோர். வேலை பாக்கற டீச்சர்ஸ்க்கு கொடுக்கற சம்பளம் மாசம் 6000 இல்லன்னா 7000 இருக்கும். ‘’

‘’ஆமா அப்படித்தான் இருக்கு’’

‘’நம்ம பிளான் என்னன்னா இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு பெரிய செலவு செய்யக் கூடாது. டீச்சர்ஸ் சேலரி உச்சபட்சமா கொடுக்கணும். என்னோட விருப்பம் லாங்வேஜ் சொல்லிக் கொடுக்கற ஒவ்வொரு டீச்சருக்கும் மாசம் ரூ.25,000 சம்பளம் கொடுக்கணும்.’’

‘’எட்டு மொழி சொல்லிக் கொடுக்கணும்னு சொல்றீங்க. அப்ப டீச்சர்ஸ் சேலரி மட்டுமே மாசம் ரூ.2,00,000’’

‘’நாம இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு எந்த செலவும் பண்ணல. இனிஷியலா ஒரு தொகையை கையில ரிசர்வா வச்சுக்கிட்டோம்னா அந்த அமௌண்ட்டோட பேங்க் இண்ட்ரஸ்ட்டே டீச்சர்ஸ் சேலருக்கு போதும். ஆக்டிவிட்டி ஆரம்பிச்சிடும்’’

‘’பெரிய பணம் தேவைப்படுமே அண்ணன்’’

‘’என்னோட இம்மூவபிள் பிராபர்ட்டி ஒன்னை சேல் பண்ண போறேன். அந்த பணத்தை இந்த விஷயத்துக்காக முழுக்க யூஸ் செய்யலாம்னு இருக்கன்’’ 

‘’எப்பவுமே ஒரு அஜெண்டா வோட இருக்கீங்க அண்ணன்’’

‘’எல்லாம் நல்லபடியா நடக்கணும் தம்பி’’