Sunday, 30 November 2025

குறிப்பறிதல்

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் தளத்தில் நார்மனின் திட்டம் என்ற பதிவை வாசித்தேன். பின்னர் அந்த பதிவில் கூறப்பட்டிருந்த The league of Gentlemen என்ற திரைப்படத்தைக் கண்டேன். சுவாரசியமான படம். பிரிட்டிஷ் ஆர்மியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஓய்வு பெற்ற ஏழு சோல்ஜர்களைக் கொண்டு இரண்டு கொள்ளைகளைத் திட்டமிடுகிறார். பாகம் -1 , பாகம் -2 என்னும் விதமானவை அந்த இரண்டு திட்டங்களும். பாகம் -1 ராணுவ முகாம் ஒன்றில் கொள்ளையடிப்பது. திட்டமிட்டவாறே அதனை நிறைவேற்றி கொள்ளையின் பழியை ஐ.ஆர்.ஏ என்னும் அமைப்பின் மீது சாட்டி விடுகிறார்கள். அவர்கள் திட்டப்படியே அவர்கள் திட்டமிட்டவாறே அது நடக்கிறது. பாகம் -2ம் அவர்கள் எண்ணிய வண்ணம் நிகழ்கிறது. இருப்பினும் அங்கே ஒரு எதிர்பாரா நிகழ்வு நிகழ்கிறது. சுவாரசியமான படம். பிரிட்டிஷாரின் நடை உடை பாவனை பேச்சு வழக்கங்கள் ஆகியவற்றை படத்தின் ஓட்டத்துக்கு இணையாகவே நாம் அவதானிக்க முடியும். அந்த படத்தின் கதையம்சத்துக்கு இணை உயிராக இருப்பவை அவை.