கிட்டத்தட்ட 3 நாட்களாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. எங்கும் வெளியில் செல்லவில்லை. மழையின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருப்பது மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. காலையில் குடையை எடுத்துக் கொண்டு ஒருமணி நேரம் நடந்து விட்டு வந்தேன். மாலை கொஞ்ச நேரம் மழை விட்டது. இத்துடன் விட்டு விட்டது என நினைத்து பைக் எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்று வரலாம் எனக் கிளம்பினேன். சட்டென நிதானமாக மழை பெய்யத் துவங்கியது. வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பி விட்டேன். மழை இல்லாமல் இருந்தால் பூம்புகார் வரை சென்று வர எண்ணியிருந்தேன்.