Tuesday, 2 December 2025

ராஜாஜி ஊரிலிருந்து

 இன்று தருமபுரியிலிருந்து ஒரு வாசகர் அலைபேசியில் பேசினார். 

சமீபத்தில் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ நூலைக் குறித்து வலைப்பூவில் எழுதிய கட்டுரையை வாசித்திருந்த நண்பர் அதனால் ஆர்வமுற்று அந்த புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி வாசித்திருக்கிறார். அவருக்கு அந்தப் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது. 

இருவரும் நூல் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் பேச்சு ராஜாஜியை நோக்கித் திரும்பியது. ராஜாஜி பிறந்த ஊர் ஹோசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையே இருக்கிறது. ராஜாஜி குறித்து உரையாடியது எங்கள் இருவருக்கும் பெருமகிழ்ச்சியை அளித்தது.