Wednesday, 3 December 2025

ஆலோசனை புகார் புத்தகம் - சி.பி.கி.ராம்.ஸ் தீர்வு

 ஊரின் அஞ்சல் நிலையம் ஒன்றில் அஞ்சல் உறை வாங்கச் சென்ற போது அஞ்சல் உறை இருப்பு இல்லை என்று கூறினார்கள். பின்னர் அந்த அஞ்சல் நிலையத்துக்கு அருகில் இருந்த ஸ்டேஷனரி கடைக்குச் சென்று ஆஃபிஸ் கவர் வாங்கி பின் அஞ்சலகம் திரும்பி 3 அஞ்சல் வில்லைகள் வாங்கி தபாலை அனுப்பினேன். போதிய அஞ்சல் உறைகளை இருப்பு வைத்துக் கொள்ளவும் என ‘’ஆலோசனை புகார் புத்தகத்தில்’’ எழுதுவதற்கு அந்த புத்தகத்தைக் கேட்டேன். அதுவும் இல்லை என பதில் தரப்பட்டது. இந்த விஷயத்தை சி.பி.கி.ராம்.ஸ் -ல் பதிவு செய்தேன். அஞ்சல்துறை உயர் அதிகாரி அலுவலகத்திலிருந்து அலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்கள். நான் நேரில் அங்கு சென்று எனது புகாரை எழுதி வாங்கிக் கொண்டனர். இன்று சி.பி.கி.ராம்.ஸ் இணையதளம் மூலன் அவர்கள் அளித்த பதில் என்னை அடைந்தது. அதாவது, அஞ்சல் நிலையத்தில் போதிய தபால் துறை விற்பனைப் பொருட்கள் ( அஞ்சல் அட்டை, இன்லாண்ட் கடிதம், அஞ்சல் உறை, அஞ்சல் வில்லை) போதிய கையிருப்பில் இருக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் ‘’ஆலோசனை புகார் புத்தகம்’’ வாடிக்கையாளர் கேட்கும் போது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் அளித்திருக்கின்றனர். நேர்ந்த சேவைக் குறைபாட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எழுதியிருந்தனர்.