மழைக்காடுகளில் தரை இறங்குகிறது மேகத்தின் மழை
கொய்யா விற்கும் சிறுவன் அங்காடி முற்றத்தில் நிற்கிறான் தற்காலிகமாக
வீட்டின் வாசலில் காத்திருக்கும் பெண் சாரலில் கைநீட்டும் போது
எண்ணிக் கொள்கிறாள் காதல் ஸ்பரிசங்களை
அனல் தெறிப்புகளென எழுந்து வருகின்றன சில்வண்டுகள்
கடிகார முள் கருதி ஒலிக்கிறது பள்ளி முடிவின் மணி
வகுப்பறைக்கும் மைதானத்துக்கும் இடைப்பட்ட தாழ்வாரத்தில்
கூடி வேடிக்கை பார்க்கின்றனர் மழலை மாறா குழந்தைகள்
ஆழி நாவாயென மழை கடந்து செல்கிறது மோட்டார் வாகனம்
கல்லாலயக் கருவறையின் ஒளி தீபம் தெய்வ முகம் பார்த்து அமைகிறது
மென் துயருடன் நிகழ்கின்றன அந்தி ஆயத்தங்கள்
பறவைக் குரல் தவிர்த்து அனைத்திலும் நிரம்பியிருக்கிறது நீர்மையின் ஈரங்கள்
கூடாரத்துக்குத் திரும்பிய ராணுவ வீரன்
வானொலிப் பெட்டியின் கரகரப்பில்
வீட்டை ஞாபகப்படுத்திக் கொண்டு
பார்த்துக் கொண்டிருக்கிறான்
வெளியில் கொட்டும் மழையை