Thursday, 3 October 2019

ஒன்பது இரவுகள் - 1

காற்றில் இறங்கும் மழை
நீரின் ஓசை நிறைகிறது
எங்கும்
உயிரைத் தீண்டுகிறது ஈரம்

தூவெளி முன் நிற்கிறான்
மானுடன்

உனது பார்வையில்
பிரவாகிக்கின்றன
ஒளி ஊற்றுக்கள்

நீ
புன்னகைக்கிறாய்

மலர்கிறது
மனத் தடாகத்தில்
ஒரு நீல மலர்