Friday, 4 October 2019

ஒன்பது இரவுகள் - 2

உன்
மலர்முகம்
புன்னகையில்
மேலும்
ஒளிர்கிறது

உன்
அருளின்
ஒளி
தீண்டும் கணம்

கரைகிறது
அகம்

என்னிடம்
இயலாமைகளும்
போதாமைகளும்
தடைகளும்
மட்டுமே
இருக்கின்றன
தாயே

உன்
கருணை
எனது விடுதலையாகட்டும்
எனது விடுதலையாகட்டும்