Saturday, 5 October 2019

ஒன்பது இரவுகள் - 3

எல்லாம்
உதிர்ந்து போன
பின்னர்
நிறைகிறது
மௌனம்
ஓய்ந்து போயிருக்கின்றன
யாவும்
பிராத்தனைகளுக்குக் கூட
மனதில்
சொல் கூட்ட முடியவில்லை
நுண்ணிய கணம்
ஒன்றில்
நிகழ்கிறது
ஒரு துவக்கம்