பறவைச் சிறு உடல்
மென் துடிப்பிலிருந்து
அருவிச் சாரலின்
நுண்மையிலிருந்து
புலரியின் மேகச்
சிவப்பிலிருந்து
ஒரு துளி மழையிலிருந்து
மலைப்பாதையின்
மௌனத்திலிருந்து
ஆர்வம் கொண்டு
கிளை பரப்பும் தீயிலிருந்து
வான்மீனின் இமைத்தலிலிருந்து
அணு அணு அணுவாய்
நீ
உருவம் கொண்டிருக்கிறாய்