Monday 20 April 2020

மாலை உரையாடல்கள் - 7

’’தம்பி! தமிழ்நாட்டு மக்களோட பலவீனம்னு எந்தெத்த இயல்புகளை நினைக்கிறீங்க?

1. எந்த விஷயத்தையும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் இயல்பை முற்றிலும் இழந்திருக்கிறார்கள். சிந்தனைக்குத் தேவைப்படும் உழைப்பை நல்க விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

2. கல்வி என்பதை ஞானம் பெறுவதற்கான வழி என எண்ணாமல் லௌகிகப் பிழைப்புக்கான வழியென எண்ணத் துவங்கி விட்டனர்.

3. அரசியல் மேடைகளில் திரும்பத் திரும்ப கூறப்படும் தேய்வழக்குகளை உண்மை என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

4. ஜாதி குறித்த விஷயங்களில், சமூகத்தில் வெளிப்படுத்த ஒரு முகமும் தங்கள் அகத்தில் வேறொரு முகமும் கொண்டிருக்கின்றனர்.

5. லஞ்சத்தை உள்ளார்ந்து அங்கீகரித்துள்ளனர்.

6. மது தங்களை முழுமையாக ஆட்கொள்வதை இயல்பாக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

7. தங்கள் பண்பாட்டுப் பெருமிதங்களான ஆலயங்களை திருப்பணி என்ற பெயரில் பேரழிவுக்கு உட்படுத்துகிறார்கள். 

8. தங்கள் பண்பாடு குறித்து எவ்விதமான கல்வியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள்,

9. இன்று பெரும்பாலானோர் தங்கள் மொழியில் பத்து வாக்கியம் எழுதக் கூட பயிற்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

10. சமூகத்திற்கான கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். 

11. விதிமுறைகளை மீறுவதில் அலாதியான சுகம் காண்கிறார்கள்.

12. பணியிடத்திற்கு குறித்த நேரத்துக்கு வருவது, வேலை நேரத்தில் முழுமையாக ஈடுபடுவது, பணி நேரம் முடிந்த பின் புறப்படுவது, பணியிடத்துக்கு வரும் நபரிடம் சுமுகமாக நடந்து கொள்வது போன்ற பணிப்பண்பாட்டின் மீது நம்பிக்கையின்றி இருக்கிறார்கள்.

13. அறிவுச் செயல்பாடுகளில் ஆர்வமற்றவர்களாக இருக்கிறார்கள்.

14. வாழ்க்கைக்கான சௌகர்யங்கள் குறித்து கவனம் கொள்ளும் அளவுக்கு தங்கள் உடல்நிலை குறித்து கவனம் இன்றி இருக்கின்றனர்.

(தொடரும்)