’’காவிரி போற்றுதும்’’ ஆலோசனையின் படி நன்செய் நிலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து மரப்பயிர்கள் நட்டு வளர்க்கும் விவசாயி தனது வயலின் ஒளிப்படங்களை அனுப்பி வைத்திருந்தார். மழையில் அவை மிக நல்ல முறையில் வளர்ந்துள்ளன. மேட்டுப்பாத்தியில் உள்ள களைகளை நீக்க உத்தேசித்துள்ளார் அந்த விவசாயி. ஓரிரு நாளில் அவருடைய வயலைப் பார்வையிட செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன்.