மகாத்மா காந்தியின் எழுத்துக்கள் நூறு தொகுதியாக தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40,000 பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடும். அவர் மறைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இப்போதும் அவ்வப்போது இன்னும் பிரசுரிக்கப்படாத அவரது எழுத்துக்கள் வெளியாகின்றன. இன்று மகாத்மா குறித்து ஒரு சுவாரசியமான நூலை இணையத்தில் கண்டேன். அதாவது, மகாத்மா எழுத்துக்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் அவர் வாசித்த நூல்களின் பட்டியலை அவர் அந்நூல்கள் குறித்து எழுதிய குறிப்புகளுடன் வெளியிட்டிருக்கிறார்கள். மகாத்மாவின் வாசிப்பு பரந்துபட்டதாய் இருப்பதை அப்பட்டியல் மூலம் உணர முடிந்தது. ஆன்மீகம், சமயம், இலக்கியம், வரலாறு, பொருளாதாரம் என பல துறைகளிலும் மகாத்மா வாசித்துக் குவித்திருக்கிறார். உலகில் மிக அதிக பக்கங்கள் எழுதிய மனிதன் எண்ணிக்கையில் அதிக புத்தகங்களை வாசித்திருப்பதில் வியப்பேதும் இல்லையே?