இங்கே இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு ஒரு சிறு வலம் சென்றேன். சாலையில் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. காவிரி வடிநிலம் வெயிலுக்கு மிகவும் பழகியது. வெயிலையே சூழல் என எண்ணுவது. இங்கும் புரட்டாசி தொடங்கி கார்த்திகை வரை மூன்று மாதங்கள் மழை உண்டு. வருடத்தின் 90 நாட்கள் என்பது தொடங்குவது போல் தொடங்கி முடிந்து விடும். 90 நாளும் மழை என்று சொல்ல முடியாது. அதில் 30லிருந்து 40 நாள் மழை பெய்யும்.
கடலோர கர்நாடகா பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்யும். சிருங்கேரி, சிக்மகளூர் ஆகிய பிராந்தியங்கள் நினைவில் எழுகின்றன. மக்கள் மழையுடன் இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எனக்கும் அவ்விதமான ஒரு வாழ்க்கைமுறை மீது ஈடுபாடு உண்டு.
மழை ஒரு வரம். மழை ஓர் ஆசி.