நேற்று ஊரில் திருஇந்தளூர் பெருமாள் ஆலயத்தின் பனையெரி நிகழ்ந்தது. மாலை 6.30க்கு சென்றேன். பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு எரி நிகழும் இடமான சன்னிதித் தெரு தேரடிக்கு 7.40 அளவில் வந்து சேர்ந்தார். பனை மட்டைகள் உயரமாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் அடியில் தீ இடப்பட்டது. மெல்ல மட்டைகளைப் பற்றிய தீ பல அடி உயரத்துக்கு பேரோசையுடன் எழுந்தது. அந்த தீயின் அனல் வெப்பம் தொலைவில் நின்றிருந்த எங்களைத் தொட்டது. அனல் தொடுகை அல்லன அகற்றி நல்லன நிறைக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்பட்டது.