ஷெல் சில்வர்ஸ்டன் ரயில் என்ஜின் குறித்து எழுதிய கவிதை மிகவும் பிரபலமானது. அந்த ரயில் என்ஜின் ஒரு சிறு குன்றின் மேல் ஏறும் போது I think i can என்று கூறி ஏறும். குன்றை ஏறிக் கடந்ததும் i knew i can என்று கூறும். இந்த வரிகளை வைத்து ஒரு விளையாட்டை வடிவமைத்தேன். எங்கள் வீட்டில் மூன்று படிகள் இருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு படியாகக் குதிக்க வேண்டும். குதிக்கும் முன் குழந்தையை i think i can என்று கூறச் சொல்வேன். அவ்வாறு கூறிய படி குதிக்கும். குதித்த பின் i knew i can என்று கூறச் சொல்வேன். அவ்விதமே குழந்தைகள் கூறும். இரண்டு மூன்று குழந்தைகள் சேர்ந்தும் இந்த விளையாட்டை ஆடுவதுண்டு.