இன்று காலை கம்மங்களி செய்து உண்டேன். மதியம் வரகரிசிக் கஞ்சி. வரகில் கம்பின் அளவுக்கு பணி கிடையாது. எளிதில் வெந்து விடும். இரவு என்ன உணவு அருந்தலாம் என யோசித்தேன். கடைத்தெருவுக்குச் சென்று ஏதேனும் பழங்கள் வாங்கி வந்தால் என்ன என்று யோசித்தேன். ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். பழக்கடை ஒன்றில் மூன்று கொய்யாப்பழங்களும் ஒரு மாம்பழமும் வாங்கிக் கொண்டேன். பங்கனப்பள்ளி மாம்பழம். வீட்டுக்கு வந்ததும் ஒரு கொய்யாவும் ஒரு மாம்பழமும் உண்டேன். மாம்பழம் அத்தனை தித்திப்பு. வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கியது. இன்றைய நாள் இனிதே நிறைவு பெற்றது. நாளை காலை 16 கி.மீ நடை செல்ல வேண்டும்.