Monday, 16 June 2025

அன்னம் - வாசகர் கடிதம்

அன்பு பிரபு,

நலம் நலமென நம்புகிறேன். அன்னம் பதிவு வாசித்தேன். நெகிழ்வான பதிவு. சமைப்பதும் அருந்துவதும் வேள்விக்கு நிகரானது என்பது நம் மரபு. ," 
மகாபாரதத்தில் யக்‌ஷப் பிரசன்னத்தில் யக்‌ஷன் கவலை இல்லாத மனிதன் யார் என்று கேட்க யுதிர்ஷ்டன் எந்த மனிதன் தனது உணவை தானே சமைத்துக் கொள்கிறானோ அவனே கவலை இல்லாதவன் என்று கூறுகிறான். ," 

இந்த வரிகள் எனக்கு நெருக்கமானவை .

அன்புடன்.

ஆர்