ஊரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்லும் சுருக்கமான வழியொன்றை பயணத்துக்கு எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். 38 கி.மீ தூரம் கொண்ட அந்த பாதையில் 1 கி.மீ க்கும் குறைவான தூரம் மேடு பள்ளமாக இருந்தது. அந்த சாலை சீரடைந்தால் முழுமையாக நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். சீரடையாமல் இருக்கும் பாதையின் தெற்கு முனைக்கு மேற்கே ஒரு சாலை செல்கிறது. அதில் 1 கி.மீ தூரம் சென்று அங்கிருக்கும் திருப்பத்தில் வடக்கு பக்கம் திரும்பினால் மேலும் ஒரு கி.மீ பயணம் செய்தால் கிழக்கு நோக்கி ஒரு திருப்பம். அங்கே திரும்பினால் சீரடையாத சாலையின் வடக்கு முனையை வந்தடைகிறோம். இது ஒரு சிறு மாற்றுப்பாதை. இந்த பாதை ஊருக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்குமான நான்கு சக்கர வாகனப் பயணத்தை எளிதாக்குகிறது.