அமைப்பாளர் தனது நண்பரான ஒரு கவிஞருக்கு ஃபோன் செய்தார்.
கவிஞர் ஃபோனை எடுத்து ஆர்வத்துடன் ‘’பிரபு ! ‘’மறையொலி’’ பதிவு வாசிச்சன். நாம நிச்சயமா ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சுடலாம்’’ என்றார்.
‘’பங்கேற்பாளர்கள் 15 லிருந்து 20 பேர் எதிர்பார்க்கலாம். அவங்க தங்க ஒரு இடம் வேணும். அவங்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாள் உணவு ஏற்பாடு செய்யணும். மொத்த ஏற்பாடு இவ்வளவு தான்’’ என்றார் அமைப்பாளர்.
‘’மறை ஓதக் கூடியவங்கள நாம அழச்சுட்டு வரணுமே?’’
‘’இணையத்துல நான்மறையும் ஒலிப்பதிவா கிடைக்குது. அத ஒரு பென் -டிரைவ் ல சேமிச்சு பிளே பண்ணலாம்’’
‘’என்ன இருந்தாலும் அது நேரா கேக்கறதுக்கு சமமா இருக்குமா?’’
‘’இருக்காது. ஆனா அவங்க 5 பேரோ அல்லது 7 பேரோ ஒரு வாரம் அல்லது பத்து நாள் தங்கியிருந்து மறை ஓதணும்னா நாம மிகக் குறைந்தபட்சமாகவேனும் ஒரு சன்மானம் கொடுத்து கௌரவம் செய்யணும் இல்லயா?’’
‘’நிச்சயமா’’
‘’அதுக்கு நம்ம கிட்ட பட்ஜெட் இருக்கா?’’
கவிஞர் மௌனமானார்.
அமைப்பாளர் சொன்னார். ‘’இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. ரிக் வேதம் சில பேருக்கு பாடமா இருக்கும். யஜூர் சில பேருக்கு பாடம். சாம வேதத்தை சில பேர் முழுசா மனப்பாடமா வச்சிருப்பாங்க. அதர்வம் படிக்கறவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான். அப்ப நாம 5 பேரை மட்டும் ஏற்பாடு செஞ்சா போதாது. 5*3 =15 பேர ஏற்பாடு செய்யணும்’’
இதில் இப்படி ஒரு பரிமாணம் இருப்பதைக் கவிஞர் யோசிக்க ஆரம்பித்தார்.
அமைப்பாளர் தொடர்ந்தார். ‘’ நாம இப்ப ஆரம்பிக்கற இடத்துல இருக்கோம். முதல்ல ஒரு ஸ்டெப் எடுத்து வைப்போம். அப்படி வைக்கறதால நாம அமைதி நிலைல இருந்து ஒரு இயக்கத்துக்கு வரோம். நம்மால எளிதா செய்யக்கூடிய ஒரு விஷயத்தை நம்ம முழு மனசோட செய்வோம். அந்த செயலும் அந்த உணர்வுமே நம்ம அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். நீங்க சொல்றது ரொம்ப உத்தமமான விஷயம். ஆனா அத முதல் ஸ்டெப்பா வச்சுக்காம இரண்டாவது இல்லண்ணா மூணாவது ஸ்டெப்பா செஞ்சு பாப்பம்’’
காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்த ஏற்பாட்டை காவிரிக் கரை ஒன்றில் செய்தால் நன்றாக இருக்கும் என யோசித்த அமைப்பாளர் பென் - டிரைவ்வையும் சி.டி பிளேயரையும் யாரிடமிருந்து பெற்றுக் கொள்வது என யோசிக்கத் தொடங்கினார்.