Monday, 24 November 2025

மொழிபெயர்ப்பு

ராஜாஜியின் கட்டுரை ஒன்றை ஆர்வத்தின் காரணமாக மொழிபெயர்த்தேன். ராஜாஜியின் ஆங்கிலம் எளிய ஆங்கிலம் எனினும் கூரியது. அவர் பயன்படுத்திய சில ஆங்கில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பதை அகராதியின் துணை கொண்டு அறிந்து கொண்டேன். மொழிபெயர்ப்பு மகிழ்ச்சி அளித்தது எனினும் அதனை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.