நேற்று சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதாவது, ஆகாஷ்வாணி வானொலியில் பிற்பகல் 1.45 தமிழ்ச் செய்திகளுக்குப் பின் ஒலிபரப்பாகும் வானிலை முன்னறிவிப்பு ஒலிபரப்பப்படாமல் இருக்கிறது என்பதை சென்னை வானிலை ஆய்வு மையத்துக்குத் தெரிவித்திருந்தேன். என்னுடைய வலைப்பூவிலும் இந்த விஷயம் குறித்து எழுதியிருந்தேன். இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் நான் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் அளித்து எனக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். சுட்டிக்காட்டப்பட்ட விஷயம் குறித்து கவனம் கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார்கள். அவர்கள் அளித்த பதில் மின்னஞ்சல் மகிழ்ச்சி அளித்தது எனத் தெரிவித்தேன்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல் போற்றத்தகுந்தது !