தமிழ் இலக்கியப் படைப்பாளியான ஜெயமோகன் நாளை ( 19.11.2025) அன்று தக்ஷசீலா பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் அளித்து கௌரவிக்கப்படுகிறார். ’’படைப்பூக்கத்தின் இமயம்’’ ஆன ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம் அளித்து தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது தக்ஷசீலா பல்கலைக்கழகம். தக்ஷசீலா பல்கலைக்கழகம் வாழ்த்துக்குரியது.
’’மகாமகோபாத்தியாய’’ உ.வே.சா அவர்களுக்கு பாரதி எழுதிய வாழ்த்துப்பா ஜெயமோகனுக்கும் உரியது.
செம்பரிதி யொளிபெற்றான் பைந்நறவு,
சுவைபெற்றுத் திகழ்ந்த தாங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்
றெவரேகொல் உவத்தல் செய்வார் ? கும்பமுனி பெனத்தோன்றும் சாமிநா
'தப்புலவன் குறைவில் சீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக்கின் நீரே ?
அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்ப.தவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின் இவன்பெருமை மொழியலாமோ
“நிதியறியோம்' இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தந் துய்க்கும்
“கதியறியோம்' என்றுமனம் வருந்தற்க ;:
குடந்தைநகர்க் கலைஞர் கோவே !!
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.