இன்று காலை 9.35க்கு ஊரின் தலைமை அஞ்சல் அலுவலகம் சென்றிருந்தேன். என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து ஒரு சிறு தொகை எடுக்க வேண்டும். இப்போது இங்கே டோக்கன் முறை அமலில் உள்ளது. அதாவது ஒரு எந்திரம் டோக்கன் வழங்குகிறது. அந்த எண் ஒலிபெருக்கியில் கூறப்படும் போது சாளரத்துக்குச் சென்று நம் பணியை நிறைவு செய்து கொள்ள வேண்டும். சேமிப்புக் கணக்கு விஷயங்களுக்கென 3 சாளரங்கள் இருந்தன. அதில் ஒரு சாளரம் மட்டுமே இயங்கியது. மற்ற 2 சாளரங்கள் இயங்கவில்லை. எனக்கு டோக்கன் வழங்கப்பட்ட நேரம் காலை 9.38. என்னுடைய முறை வந்த நேரம் 10.35. 3 சாளரங்களும் இயங்கியிருந்தால் என் பணி 10 மணி அளவில் நிகழ்ந்திருக்கும். 30 நிமிடத்துக்கு மேலே கூடுதல் காத்திருப்பு. இன்று 100 பேர் அங்கு 30 நிமிடம் காத்திருந்தால் அது 50 மணி நேரத்துக்கு சமம். பணிகள் முடிந்து வீடு திரும்பியதும் தலைமை அஞ்சலக நிலை குறித்து சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் பதிவு செய்தேன்.