நேற்று மாலை தலைமை தபால் நிலையத்திலிருந்து கிளார்க் ஒருவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். சி பி கி ராம் ஸ் ல் அளித்த புகார் குறித்துக் கூறி வருத்தம் தெரிவித்தார். சி பி கி ராம் ஸ் பதிவுகள் ரகசியமானவை ; புகார்தாரர் யார் என்ற முழு விபரத்தை அது அளிக்காது. என்னுடைய டோக்கன் எண் என்ன என்பதைப் புகாரில் குறிப்பிட்டிருந்ததால் அவர்கள் ஆவணங்களில் அந்த டோக்கன் எண்ணுக்குரிய அஞ்சலகக் கணக்கு எண் என்பதை அறிந்து அவர்களிடம் இருக்கும் என் எண் வழியாகத் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
3 வாடிக்கயாளர் சாளரங்களில் 1 மட்டுமே செயல்பட்டது என்பதே எனது புகார். இது பொதுப் புகார். யார் மீதும் தனிப்பட்ட விதத்திலானது அல்ல என்பதைக் கூறினேன்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைப்பு வந்தது.
மேல் நடவடிக்கை கடுமையாக இருக்கக்கூடும் என எதிர்பார்ப்பதால் இதில் ஏதேனும் உதவ முடியுமா என்று கேட்டார்கள்.
நடந்ததைத் தெரிவித்திருக்கிறேன். தெரிவிக்கப்பட்ட அனைத்தும் உண்மை. 9.38க்கு டோக்கன் பெற்றது. அந்த டோக்கனுக்கான சேவை 10.35க்கு அளிக்கப்பட்டது. 3 சாளரங்களில் 1 மட்டும் இயங்கியது என அனைத்தும் அவர்கள் எந்திரப் பதிவுகளில் உள்ளன. அதை மட்டுமே நான் சுட்டிக் காட்டியுள்ளேன். நடவடிக்கையும் மாற்றமும் தேவை என்பதற்காகத்தானே புகார் அளித்துள்ளேன். இதில் நான் எப்படி உதவ முடியும்?