@@@@@ கிளை அஞ்சல் நிலையம் மீது சி பி கி ராம் ஸ் புகார்
29.07.2026 அன்று 1315 மணிக்கு @@@@@அஞ்சல் நிலையம் சென்று 9 போஸ்டல் கவர் வேண்டும் எனக் கேட்டேன். அங்கிருந்த சப் போஸ்ட் மாஸ்டர் போஸ்டல் கவர் கையிருப்பு இல்லை ; வேண்டுமானால் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் 9 தருகிறேன். வெளிமார்க்கெட்டில் ஆஃபிஸ் கவர் வாங்கி ரூ.5 ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி அனுப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் போஸ்டல் கவர் கையிருப்பு வைத்துக் கொள்வதில்லை என்றும் கூறினார். என்னுடைய புரிதலின் படி போஸ்ட் ஆஃபிஸ் என்பது போஸ்டல் டிபார்ட்மெண்ட் தொடர்பான அடிப்படையான விஷயங்கள் கிடைக்கும் இடம். அது விதிமுறைகளின் படியும் சட்ட திட்டங்களின் படியும் இயங்கக் கூடிய இடம் என்றே கருதுகிறேன். என் கையில் ரூ.50 இருந்தது. நான் 9 போஸ்டல் கவர் வாங்கி அதில் 9 தபால்களை வைத்து அனுப்புவதாக இருந்தேன். போஸ்டல் ஸ்டாம்பும் வெளிமார்க்கெட்டில் கவரில் வாங்கினால் எனக்கு ரூ.54 ஆகும். கூடுதல் செலவாகும் என்பதுடன் என் கையில் ரூ.54 இல்லை எனில் என் பணி நிறைவடையாது. இந்த விஷயத்தை சில்லறை விஷயமாக நான் நினைக்கவில்லை. ஒரு வாடிக்கையாளருக்கு இது ரூ.4 சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கும். ஒரு நாளில் அந்த அஞ்சல் நிலையத்துக்கு 10 பேர் வருவார்கள் எனில் அது ரூ.40 சம்பந்தப்பட்டது. 300 நாட்கள் ஒரு ஆண்டில் வேலைநாட்கள் எனில் அது ரூ.12,000 தொடர்பான பிரச்சனை. இந்த சி பி கி ராம் ஸ் புகார் மூலம் அஞ்சல்துறை மேலதிகாரிகளை @@@@@ கிளை அஞ்சல் நிலையம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்துடன் மேற்கொண்ட வரவு செலவுகளை ஆடிட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். @@@@@ கிளை அஞ்சல் நிலையத்துக்கு கடைசியாக எப்போது போஸ்டல் கவர் வழங்கப்பட்டது ? அது விற்று தீர்ந்தது எப்போது? விற்ற பின் ஏன் போஸ்டல் கவர் ஆர்டர் செய்யவில்லை? ஆகிய வினாக்களைக் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டு விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான தபால் துறையின் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பதையும் போஸ்டல் கவர் கேட்டு வரும் வாடிக்கையாளரிடம் போஸ்டல் கவர் இருப்பு வைத்துக் கொள்வதில்லை என சப் போஸ்ட் மாஸ்டர் பதில் கூறுவதையும் அஞ்சல்துறை உயர் அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். மேற்படி விஷயம் குறித்து விசாரணை நடத்தி உரிய மேல்நடவடிக்கை எடுக்குமாறு அஞ்சல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்