உனது உள்ளங்கையை
என் நெற்றியின் மேல்
வைக்கிறாய்
மெல்லிய மழையொன்று எப்போதோ பெய்தது
நிறைநிலவொன்று எழுந்து கொண்டிருக்கிறது
நுரைக்கும் அலைகடல் ஒன்றின் மேல்
விருட்சத்தின் கிளையிலிருந்து சடசடத்துப் பறக்கும் பறவை
ஒரு பெருநதியின் நீர் அள்ளிப் பருகி
தணிகிறது ஒரு தாகம்