Sunday, 4 October 2020

உன்னை
உன் பெயர் கொண்டு
அழைக்கும் போது
அரிய கலைப்பொருள் ஒன்றைக்
கையாளுதலின்
நுட்பங்களையும்
கவனங்களையும்
கைக்கொள்ள வேண்டியிருக்கிறது
உனக்கு
நான் ஒரு பெயர் சூட்டிக் கொள்கிறேன்
 
நீ
உடனிருக்கும் போது
கரைந்து கரைந்து
எடையின்மை கொண்டு
காற்றில் எழுகிறேன்
உன் கைகளைப் பற்றிக் கொள்ளட்டுமா?
 
நனவிலும் கனவிலும்
உனது நினைவுகள்
உனது சொற்கள்
நினைவு கனவுகளுக்கு
அப்பால்
நீ வாசம் புரியும்
உலகங்களுக்கு
என்னைக்
கூட்டிக் கொண்டு செல்கிறாயா?