குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடுதற்றுத் தான்முந் துறும். (1023)
தனது சமூகத்தின் நிலையை உயர்த்துவேன் என்ற உறுதியோடு பணிகளை ஆற்றுபவனுக்கு தெய்வங்கள் முதல் ஆளாக முன் வந்து வரிந்து கட்டிக் கொண்டு அவன் மேற்கொள்ளும் பணிகளில் துணையாய் நிற்கும். சமூக மாற்றத்துக்காக உழைப்பவன் தெய்வங்களின் பிரியத்துக்கும் அன்புக்கும் உரியவன் என்கிறார் திருவள்ளுவர்.