Monday, 14 December 2020

ஆசான் சொல் - 16

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். (1040)

பிரம்மத்தின் வடிவமான அன்னத்தை உற்பத்தி செய்யும் விவசாய விளைநிலத்தில் முறையாக விவசாயம் செய்து உணவுப்பெருக்கம் நிகழ்த்தாமல் சோம்பி இருக்கும் விவசாயியைக் கண்டு நிலமென்னும் இனிய பெண் ஏளனமாகச் சிரிப்பாள்.