Thursday, 10 December 2020

ஒலி

ஒற்றை ஒலி
உலகெங்கும்
வானெங்கும்
ஒளியெங்கும்
இருளெங்கும்

ஒரு குழந்தை
’’மா’’
என்கிறான்
முதல் முறையாக
அள்ளி அணைக்கிறாள்
அன்னை
உருகி உருகி
இல்லாமல் ஆகிறது
அவள் மனம்

குழந்தை
‘’மா’’ 
‘’மா’’
எனும் தோறும்
உலகம்
இனிமையாகிக் கொண்டே
இருக்கிறது
அவளுக்கு

இறைவன் அழைப்பவனா
இறைவன் அழைக்கக்கூடியவனா
இனியவனா
இறை அழைப்பைக்
குழந்தை
வெளிப்படுத்துகிறானா

விண்ணகமே
மண்ணகமே
அவள் கண்கள் நீர் துளிர்க்கின்றன

இனிமை
துயரம்
அரற்றல்
வலி
வேதனை
கூக்குரல்
அலறல்

மேலே
எல்லாவற்றுக்கும் மேலே
இருக்கிறது
ஒற்றை ஒலி

ஒலித்துக் கொண்டு