’’காவிரி போற்றுதும்’’ நண்பர்களுடன் இன்று பேசினேன். அடுத்த கட்ட பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என விசாரித்தனர். இங்கே சில நாட்களாக நல்ல மழை. கடந்த வாரத்திலும் மழை. மழையில் கள ஆய்வு மேற்கொள்ள இயலாத நிலை. மழை விட்டதும் பணிகளைத் துவங்க வேண்டும். மேலும் பங்களிக்க விரும்புவதாகக் கூறினர். என் மீது நண்பர்கள் காட்டும் அன்பும் பிரியமும் என்னைக் கடனாளியாக உணர வைக்கிறது. நண்பர்களே ! உங்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நான் அறியேன். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் உடனிருப்பதாலேயே நமது முயற்சிகள் சாத்தியமானது. உங்கள் ஆதரவுடன் நம் பயணம் தொடரட்டும்.