Monday, 9 March 2026

தொழிலும் நட்பும் (நகைச்சுவைக் கட்டுரை)

 சமீபத்தில் அறிமுகமான நண்பர் எனது நண்பரின் வயலை வாங்கிக் கொள்ள விருப்பம் கொண்டுள்ளார். நிலம் குறித்த விபரங்கள் ஆவணங்களை அளிக்க அவ்வப்போது சந்தித்தேன். அதில் அறிமுகமான நண்பருடன் ஒரு பரிச்சயம் ஏற்பட்டது. அவர் செயற்கை உரங்கள் இடாமல் விவசாயம் செய்ய விரும்புகிறார். அவருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ முயற்சி செய்யும் விஷயத்தின் செயல் குறிப்பை அளித்தேன். இந்த விஷயத்துக்கும் நில பேரத்துக்கும் தொடபில்லை எனினும் அவரது பரிசீலனைக்கு ஒரு விஷயத்தை அளித்தது மேலும் நட்பார்ந்த சூழலை உருவாக்கியது. 

அவரிடம் அளித்த குறிப்பு 

ஒரு ஏக்கர் = 43,560 சதுர அடி

தோராயமாக 43,560 சதுர அடி = 210 X 210

ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையே இடைவெளி 12 அடி.  (பொதுவாக 10 அடி இடைவெளியும் கொடுக்கப்படுகிறது)

210 அடியில் நடக்கூடிய மரங்களின் எண்ணிக்கை = 17

210 X 210 = 17 X 17 = 289

2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். அதில் மக்கிய சாண எரு இட்டு தேக்கு மரக்கன்றுகளை நட வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக்காலத்தில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. 

மரக்கன்று வளரும் முதல் இரு வருடம் கவாத்து செய்ய வேண்டும். மரம் 10 அடி உயரம் வரை கவாத்து செய்தால் போதுமானது. அதற்கு மேல் உள்ள உயரத்துக்கு கவாத்து செய்யத் தேவையில்லை. 

முறையாக குழி எடுத்து சாண எரு இடப்பட்டு வாரம் இரு நாள் நீர் பாய்ச்சி கவாத்து செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட தேக்கு மரம் 15 ஆண்டுகளுக்குப் பின்
குறைந்தபட்சம் ஒரு மரம் ரூ.50,000க்கு விற்பனை ஆகும். 289 மரங்களின் விற்பனை விலை = ரூ.1,44,50,000 (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்)