அனுப்புநர்
ர.பிரபு
&&&&&&&
&&&&&
&&&
பெறுநர்
பொது தகவல் அதிகாரி
லோக் பவன்
கிண்டி
600032
ஐயா,
பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி சில தகவல்கள் கோரி விண்ணப்பம்
பார்வை : தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.10 முத்திரைவில்லையாக இந்த விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 17வது சட்டசபைக்கான 234 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பட்டியல் கனம் தமிழக ஆளுநரிடம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 17வது சட்டசபையின் தனிப்பெரும்கட்சி 04.05.2026 முதல் 09.05.2026 வரை கனம் தமிழக ஆளுநர் அலுவலகத்துடன் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். மேற்படி கடிதப் பரிமாற்றங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேற்படி ஆவணங்களைப் பெறுவதற்கான கட்டணம் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அதனை செலுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்கிறேன்.
04.05.2026 முதல் 09.05.2026 வரை 17வது சட்டப்பேரவையின் தனிப்பெரும்கட்சி கனம் ஆளுநருக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள், கனம் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டு அனுப்பிய கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள், தனிப்பெரும் கட்சி சார்பில் கனம் ஆளுநரிடம் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள், பதவிப் பிரமாணம் வரையான மின்னஞ்சல் மற்றும் கடிதத் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோருகிறேன். தெரிவிக்கப்படும் அதற்கான கட்டணத்தைச் செலுத்துகிறேன்.
நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
இடம் : மயிலாடுதுறை
நாள் : 10.05.2026