Thursday, 1 October 2026

வருத்தம்

நேற்று ஒரு பொதுத்துறை வங்கி மேலாளரைச் சந்தித்தேன். ஓவர் டிராஃப்ட் கடன் எனது நண்பர் ஒருவருக்குத் தேவைப்பட்டது. அது குறித்த விபரங்கள் கேட்கப் போயிருந்தேன். வங்கி மேலாளர் எனக்கு நன்கு பரிச்சயம் உள்ளவர். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கிச் சேவையை அளிக்க விரும்புபவர். அவரால் எனது நண்பரின் தேவைக்கு ஏற்ற வங்கிக் கடன் திட்டத்தை இன்னதென்று வரையறுத்துக் கூற இயலவில்லை. விதிமுறைகள் பல மாறியிருப்பதும் புதிய விதமான வடிவமைப்பை வங்கிக் கடன்கள் பெற்றிருப்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும் வங்கி என்பது ஒரு வணிக ஸ்தாபனம். ஒரு வாடிக்கையாளர் தேவையைத் தெரிவிக்கும் போது அவர் தேவையை நிறைவேற்றும் விதமான கடன் திட்டத்தை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடன் திட்டங்களை வங்கி மேலாளர் தெரிவித்திருக்க வேண்டும். வட்டி விகிதம் அதிகமாய் இருந்தாலும் இந்த இந்த கடன் திட்டங்களில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வங்கி மேலாளர் தெரிவிக்க வேண்டியது அவருடைய கடமை என்றே நான் கருதுகிறேன். நண்பரிடம் விபரம் தெரிவித்தேன். தனியார் வங்கிகளை அணுக அவர் முடிவு செய்திருக்கிறார்.