Sunday, 7 June 2026

டாக்டரின் கடிதம்

அன்புள்ள பிரபு அவர்களுக்கு,
 நீங்கள் என் நினைவில் நின்ற நிகழ்வுகள்  புத்தகத்தைப் பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.தமிழ் புத்தகத்தை படித்து சந்தோஷமாக அதைப் பற்றி எழுதுபவரை பார்த்தால் சந்தோஷமாக தானே இருக்கும்.
 அன்புடன்,
MCh

அன்புள்ள டாக்டர்,

தங்கள் மின்னஞ்சல் கண்டது மிக்க மகிழ்ச்சி. நம் நாட்டில் மருத்துவப் பணி என்பது நோய்மையின் துயரத்தைத் தினமும் காணும் பணி ஆகும். வருடக்கணக்காக அந்தத் துறையில் இருப்பவர் ஆயினும் வாழ்க்கையின் சிறு சிறு நுணுக்கமான அழகுகளைக் காணும் அகம் தங்களுக்கு வாய்த்திருக்கிறது ; இறைமையால் அருளப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த நூலில் தங்களின் அகத்தின் தனித்துவம் கொண்ட பகுதி வெளிப்பட்டிருக்கிறது. அதுவே அந்நூலின் பெருஞ்சிறப்பு. நீங்கள் தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். 

அன்புடன்,
பிரபு