Thursday, 22 October 2026

விவசாய நண்பருக்கு ஒரு கடிதம் - வாசகர் கடிதம்

 இது அருமையான முயற்சி அண்ணா

நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது எங்கள் வீட்டில் மாடுகளும், பயோ கேஸ் பிளாண்ட்டும் இருந்தது.

கிராம அளவில் செய்ய கூடிய விஷயம் தான் - மக்கள் மனம் திறந்து முன் வரனும்.

 வாழ்துக்கள் அண்ணா

 நன்றி

அன்புடன்,

ரா.வெ.ராமன்

 

அன்பு நண்பருக்கு,

 

தாங்கள் பதிவை வாசித்ததும் அதற்கு பதிலளித்ததும் மகிழ்ச்சி அளித்தது.

 

முன்னர் கோபர் கேஸ் என இருந்ததற்கும் தற்போது சிபிஜி எனக் கூறப்படும் பயோ கேஸுக்கும் முக்கியமான வேற்றுமைகள் உள்ளன.

 

முன்னர் சாணம் மட்டுமே இட முடியும். தற்போது சாணத்துடன் கணிசமான அளவு தாவரப் பொருட்களும் இடப்பட வேண்டும். முன்னர் சாண எரிவாயு குறைவாகவே உற்பத்தி ஆகும். தற்போது மீத்தேன் மிகப் பெரிய அளவில் உற்பத்தி ஆகும்.

 

அப்போது எரிவாயுவைப் பயன்படுத்தி கார், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் இயக்கும் தொழில்நுட்பம் கிடையாது. அந்தத் தொழில்நுட்பம் கடந்த 15 ஆண்டுகளில் உருவாகி நிலைபெற்றிருப்பது. இப்போது நாம் சி பி ஜி பயன்படுத்தி பேருந்து, கார் , டிரக் ஆகியவற்றை இயக்க முடியும்.

 

இந்த விஷயங்களுடன் சேர்த்து சி பி ஜி குறித்து சிந்திப்பது முழுமையான வாய்ப்புகளை உணரச் செய்யும்

அன்புடன்

பி ம

 

புரிகிறது.. நன்றி

உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். 

ரா.வெ.ரா