மயிலாடுதுறை சந்திப்பு ரயில் நிலையத்தில் காலைப் பொழுதுகளில் மயிலாடுதுறை - சேலம் ரயிலும் மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி ரயிலும் நான்காவது நடைமேடையிலிருந்து புறப்படுகின்றன. சேலம் ரயில் காலை 0600 மணிக்கு புறப்படுகிறது. திருச்சிராப்பள்ளி ரயில் காலை 0750க்கு புறப்படுகிறது. இரண்டும் மேற்கு நோக்கி செல்லும் ரயில்கள் என்பதால் சேலம் ரயில் நான்காம் நடைமேடையின் தெற்குப் பக்கமாகவும் திருச்சிராப்பள்ளி ரயில் நடைமேடையின் வடக்குப் பக்கமாகவும் நிற்கின்றன. காலை 0600 மணிக்கு சேலம் ரயில் புறப்பட்டுச் சென்ற பின்னும் திருச்சிராப்பள்ளி ரயில் நடைமேடையின் வடக்குப் பகுதியிலேயே உள்ளது. நடைமேடையின் வடக்குப் பகுதி பயணிகள் நடைப்பாலத்திலிருந்து மிகவும் தொலைவில் இருக்கிறது. ஆதலால் ரயில் பயணிகள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோர் நீண்ட தூரம் நடந்து சென்று ரயிலேற வேண்டியிருக்கிறது. காலை 0600 மணிக்கு சேலம் ரயில் புறப்பட்டுச் சென்றதும் திருச்சிராப்பள்ளி ரயிலை பயணிகள் நடைப்பாலத்துக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.