அன்னையே அன்னமிடுங்கள்
அன்பாலானது தங்கள் இருப்பு
அன்பின் அன்னத்தை அளியுங்கள் அன்னையே
கடுமையான இறுக்கம் கொண்ட
எங்கள் மனோபாவங்கள்
எங்களை விட்டு அகலட்டும்
மென்மையான இந்த உலகை
மென்மையான இந்த ஜீவிதத்தை
மென்மையாக அணுக
மென்மையாக உணர
தங்கள் அன்பின் அன்னம்
எங்களுக்கு அருளட்டும்
அன்னையே அன்னமிடுங்கள்