Sunday, 3 May 2026

 எல்லையில்லாப் பெருவெளி
நீ ஆளும் தேசம்
நீர் மேகங்கள்
உன் சிங்காதனம்
வானில் நீந்தும் மீன்கள்
ஒளிரும் உன் ஆபரணங்கள்
அலைகடல்
உன் காலின் சிலம்பு
முடிவற்றவளே
மகத்தானவளே
உயிருக்குள் துடிக்கும் உயிரே
உன் பாதத்தில்
என்னிடம் 
இருக்கும்
ஒரு மலரை 
வைக்கிறேன்