Sunday, 3 May 2026

உன் முன்
சொல்லெடுக்காமல்
இருந்து விடுகிறேன்
உன்னிடம்  பேசவில்லை
உன் இருப்பின் இனிமையை
உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும்  
மகத்துவத்தை
உன் உயிர்ப்பின் பெருவெளியை 
முழுமையாகச் சொல்லும்
சொல்
அகமெழக்
காத்திருக்கிறேன்
உன் முன்னால்
சொல் முன்னால்