Friday, 1 May 2026

 இருத்தல்
எத்தனை இனியது
எவ்வளவு பெரிய வெளி
எத்தனை வான் மீன்கள்
ஆழி சூழ் உலகு
அதில் பரவியிருக்கும் உயிர்க்குலம்
எப்போதும் இருக்கிறேன் இங்கே
எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை
இங்கே