Saturday, 2 May 2026

நித்ய அமுதம்

 இன்று
இப் பொழுது
இந்தக் கடல் அமுதக் கடலாய் இருக்கிறது
நுரைக்கும் அலைகள் அமுதமாய் இருக்கின்றன
நிலவின் துமிகள் அமுதத் துமிகளாய் இருக்கின்றன
வானம் அமுத வானாய் இருக்கிறது
அமுத வானின் அமுதத் துமிகள் தூவும் அமுதக் கடலின் கரையில்
நின்றிருக்கும்
நீ
நித்ய அமுதம்