அனுப்புநர்
ர.பிரபு
*****
****
***
பெறுநர்
1.கிளை மேலாளர்
*** **** வங்கி
*******
2. கிளை மேலாளர்
***** வங்கி
*****
3. கிளை மேலாளர்
*** *** வங்கி
****
ஐயா,
பொருள் : மயிலாடுதுறை மாவட்டம், **** வட்டம், ***** கிராமத்தில் 1000 பெண்களை இணைத்து கூட்டுறவு அமைப்பொன்றை உருவாக்கி அவர்களுக்கு 1000 நாட்டுப் பசுமாடுகள் வாங்கிக் கொடுத்து நெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தி, இயற்கை உரம் உற்பத்தி மற்றும் இவற்றின் விற்பனை மூலம் ***** கிராமத்துக்கும் ***** கிராமத்தின் பெண்களுக்கும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல் - வங்கி ஆதரவைக் கோருதல்
மயிலாடுதுறை மாவட்டம், **** வட்டம், ***** கிராமம் 4000 மக்கள்தொகை கொண்டது. அதில் சரிபாதி எண்ணிக்கையில் பெண்கள் இருக்கிறார்கள். அந்தக் கிராமத்தின் 1000 பெண்களை இணைத்து அவர்களுக்கு வங்கிக் கடன் மூலம் 1000 நாட்டு மாடுகள் வாங்கிக் கொடுத்து அதன் மூலம் நெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தி , இயற்கை உரம் உற்பத்தி ஆகியவை செய்து அவற்றை விற்பனை செய்வதன் மூலம் அந்தக் கிராமத்தின் பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க ஒரு முயற்சி திட்டமிடப்படுகிறது.
தற்போது இந்த விஷயம் கொள்கை அளவிலான விவாதத்தில் இருக்கிறது. மிக விரைவில் செயலாக்கம் பெறும். இந்த விஷயம் செயலாக்கம் பெற பலவிதமான ஆதரவு தேவைப்படுகிறது. அதில் வங்கிகளின் ஆதரவு என்பது மிக முக்கியமானது. ***** கிராமத்துக்கு அருகாமையில் இருக்கும் வங்கிகள் என்ற விதத்தில் தங்கள் வங்கியின் ஆதரவும் கோரப்படுகிறது.
5 ஏக்கர் பரப்புள்ள இடத்தை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொண்டு அதில் மாட்டுக் கொட்டகை , இயற்கை எரிவாயு உற்பத்தி தளவாடங்கள், நெய் உற்பத்தி தளவாடங்கள் ஆகியவற்றை அமைத்துக் கொள்ள திட்டம். 1000 பெண்களுக்கு 1000 நாட்டு மாடுகள் வாங்கித் தரப்படும். 1000 பெண்களை இணைத்து உருவாக்கப்படும் கூட்டுறவு அமைப்பு 1000 மாடுகளை வாங்கிப் பராமரிக்கும். அமைப்பின் உறுப்பினர்களான 1000 பெண்களில் விருப்பம் தெரிவிப்பவர்கள் மாட்டுக் கொட்டகை பராமரிப்பு, எரிவாயு உற்பத்தி, நெய் உற்பத்தியில் ஈடுபட்டு அதற்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்வார்க்ள். மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் அந்தக் கிராமத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு கூட்டுறவு அமைப்புக்கு விற்பனை செய்யப்படும்.
துவக்க நிலைக் கணக்கீடு கீழே வழங்கப்பட்டுள்ளது. திட்ட அறிமுகம் என்னும் அளவிலேயே இக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்களை நேரில் சந்தித்து தங்கள் ஆலோசனைகளைப் பெற்று மேலும் தளவாட உற்பத்தியாளர்களிடம் விலைப்புள்ளிகளைக் கோரி பெற்ற பின் முழுமையான திட்ட வரைவு உருவாக்கப்படும்.
கணக்கீடு:
குறிக்கோள் : கிராமத்தின் 1000 பெண்களை இணைத்து கூட்டுறவு அமைப்பொன்றை உருவாக்கி அவர்களுக்கு வங்கிக் கடன் மூலம் 1000 நாட்டு மாடுகள் வாங்கிக் கொடுத்து மேலும் வங்கிக் கடன் மூலம் நெய் உற்பத்தியும் இயற்கை எரிவாயு உற்பத்தியும் செய்து விற்பனை செய்வதன் மூலம் கிராமத்தின் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துதல், கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துதல் மற்றும் நாட்டுப் பசுமாடுகளைப் பாதுகாத்தல்.
தேவை : கிராமத்தில் வாடகைக்கு 5 ஏக்கர் நிலம். மாட்டுக் கொட்டகை அமைக்க. நெய் உற்பத்தி சாதனங்கள் அமைக்க. இயற்கை எரிவாயு தயாரிக்க. (1000 மாடுகளுக்கு பசுந்தீவனம் உற்பத்தி செய்ய 100 ஏக்கர் நிலம் தேவை. எனினும் அந்தக் கிராமத்தின் விவசாயிகளிடமிருந்து பசுந்தீவனம் உற்பத்தி செய்து தரச் சொல்லி விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். கிராம மக்கள் தொகை 4000ல் ஆயிரம் பெண்கள் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் இடம் பெற்றிருப்பார். எனவே கிராமத்தின் எல்லா குடும்பங்களும் இதில் பங்கு பெற்றிருப்பார்கள். அந்தக் கிராமத்தில் இருப்பவர்களே பசுந்தீவனம் உற்பத்தி செய்து தருவதால் அதனை வாங்க அளிக்கப்படும் தொகையும் கிராமத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும்)
நாட்டு மாடு ஒன்றின் விலை ரூ. 1,00,000 - 2,50,000 இருக்கும். கணக்கீட்டுக்கு ரூ.1,00,000 என்றே கொள்வோம்.
1000 மாடுகளின் விலை = ரூ. 10 கோடி
அடிப்படைக் கட்டமைப்புகள் - ரூ. 2 கோடி
பெண்கள் கூட்டுறவு அமைப்பு, கால்நடை வளர்ப்பு, இயற்கை எரிவாயு ஆகியவை இணைந்திருப்பதால் 25 சதவீதம் வரை மானியம் கிடைக்கலாம்.
அவ்வாறெனில் மூலதனம் = ரூ. 9 கோடி
மாத உற்பத்தி - நெய் - 6000 கிலோ - ரூ. 60 லட்சம்
மாத உற்பத்தி : இயற்கை எரிவாயு- ரூ.10 லட்சம்
மொத்த மாத வருவாய் - ரூ. 70 லட்சம்
மாதாந்திர இயக்க செலவு - ரூ. 35 லட்சம்
மாதாந்திர லாபம் = ரூ. 35,00,000
மாதாந்திர இ எம் ஐ - ரூ. 8,00,000
மாதாந்திர லாபம் - ரூ. 27,00,000
முதல் 3 ஆண்டுகள் லாபத்தை எடுத்துக் கொள்ளாமல் வங்கிக் கடனை பெண்கள் கூட்டுறவு அமைப்பு அடைத்தால் 3 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கூட்டுறவு அமைப்புக்கு மாதம் ரூ. 35,00,000 லாபம் கிடைக்கும்.
மேலும் அந்தக் கூட்டுறவு அமைப்புக்கு 1000 மாடுகளும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் முற்றிலும் சொந்தமாகியிருக்கும்.
3 ஆண்டுகளில் 1000 மாடுகள் 2000 மாடுகளாகப் பெருகியிருக்கும்.
அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.3500 லாபமாகக் கிடைக்கும்.
இந்த 1000 பெண்களில் விருப்பம் உள்ளவர்கள் மாடுகளைப் பராமரிக்கும் பணியிலும் நெய் உற்பத்திப் பணியிலும் இயற்கை எரிவாயு உற்பத்திப் பணியிலும் ஈடுபட்டு ஊதியம் பெற்றுக் கொள்ளலாம்.
*********
இந்த வாரத்தில் நேரில் சந்தித்து தங்கள் வழிகாட்டுதல்களையும் தங்கள் ஆலோசனைகளையும் பெறுகிறேன்.
நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
இடம் : மயிலாடுதுறை
நாள் : 19.10.2026
நகல்
1. மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை
2. வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
சீர்காழி
3. தலைமை அலுவலகம்
*** **** வங்கி
*******
4. கோட்ட மேலாளர்
கோட்ட அலுவலகம்
***** வங்கி
*********
5. கோட்ட மேலாளர்
கோட்ட அலுவலகம்
*** *** ***
*****