உலகெங்கும் அரசியல் என்பது அரசியல் அதிகாரம் பொதுமக்களிடம் வரி வசூல் செய்வது என சுருக்கமாகக் கூற முடியும். பொதுமக்கள் 99 சதவீதத்தினர் என்றால் அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் 1 சதவீதம் இருக்கிறார்கள். எல்லா விதமான அரசியல் அதிகாரத்திலும் எண்ணிக்கை இவ்விதமாகவே இருக்கிறது. இருபத்து ஓராம் நூற்றாண்டின் இன்றைய தினத்திலும் உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் மட்டுமே ஜனநாயக அரசியல் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மீதி 60 சதவீதத்தினர் மன்னராட்சியிலும் சர்வாதிகார ஆட்சியிலும் ராணுவ ஆட்சியிலும் வாழ்கின்றனர். அரபு நாடுகளில் இன்னும் மன்னராட்சியே நடக்கிறது. அரபு நாடுகளில் இன்னும் ஜனநாயக ஆட்சி உருவாகவில்லை. சீனாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. ரஷ்யாவிலும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. ஆஃப்கனில் ராணுவ் ஆட்சி நடக்கிறது.
1 சதவீத எண்ணிக்கை கொண்ட குழு 99 சதவீத மக்களிடம் அதிகாரம் செலுத்த மிக அதிகமாகப் பயன்படுத்தும் உபாயம் - ‘’பிரித்து ஆளுதல்’’. மக்கள் குழுக்களுக்குள் ஐயங்கள் உருவாக்கி மக்கள் ஒன்றுபடாமல் பிரிப்பது. பிளவுபட்ட மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளத் தொடங்குவர். தாங்களே மோதலை உருவாக்கி பின்னர் அந்த மோதல் மூலம் குழுக்களை வலுவிழக்கச் செய்து எல்லா குழுக்கள் மீதும் அதிகாரம் செலுத்துவதே ‘’பிரித்து ஆளும் அரசியல்’’. காலனி ஆதிக்கம் உலகெங்கும் ‘’பிரித்து ஆளும் அரசியலைக்’’ கொண்டு சென்றது. ஆபிரகாமிய மதங்களான யூதம், கிருஸ்தவம் , இஸ்லாம் ஆகியவற்றில் ‘’தான் - பிறர்’’ என்னும் வலுவான எதிரிடை உண்டு. கிருஸ்தவமும் இஸ்லாமும் மேற்காசியாவில் வலுப்பெற்ற போது யூதர்கள் உலகெங்கும் அடித்து விரட்டப்பட்டனர். ‘’காஃபிர்கள்’’ எனக் குறிப்பிடப்பட்டு அவர்கள் தேசம் இன்றளவும் குறி வைக்கப்படுகிறது. அவர்கள் மக்கள் இன்றளவும் குறிவைக்கப்படுகின்றனர். நமது தேசம் ஆபிரகாமிய மதத்தினரின் தாக்குதலை 800 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்கொள்கிறது. இன்றும் எதிர்கொள்கிறது. நம் பண்பாடு உருவாக்கியிருந்த கலையையும் கட்டிடங்களையும் கல்வியையும் அழிப்பதை ஆபிரகாமிய மதத்தினர் தங்கள் மதம் தங்களுக்கு அளித்திருக்கும் கடமை எனக் கருதுகின்றனர்.
ஆபிரகாமிய மதத்தின் காரணமாக நம் நாடு பிரிக்கப்பட்டது. பிரிந்து போன ஆபிரகாமிய மதத்தின் தேசம் இன்று துண்டு துண்டாகி உடையும் நிலையில் உள்ளது. நம் தேசம் ஒன்றுபட்டு இருக்கிறது.
மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒருங்கிணைப்பதன் மூலம் மகத்தான விஷயங்களை சாதிக்க முடியும்.