விஜயதசமியில் தொடங்கப்படும் முயற்சிகள் முழு வெற்றியடையும் என்பது நம் நாட்டு மக்களின் நம்பிக்கை.
இன்று இயற்கை எரிவாயு உற்பத்தி கேந்திரங்கள் சிலவற்றை நேரடியாகச் சென்று பார்வையிடலாம் என விரும்பி ஊருக்குப் பக்கத்தில் எங்கே இருக்கின்றன என இணையத்தில் தேடிப் பார்த்தேன். ஊரிலிருந்து 80 கி.மீ தொலைவில் இருந்தன. அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். வருகை புரிய உகந்த நாளையும் நேரத்தையும் ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாகக் கூறினார்கள்.
எனது நண்பர் ஒருவர் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரை நேரில் சந்தித்தேன். சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது ; அங்கே சென்று பார்வையிடுவோம் எனக் கூறினார்.