Tuesday, 20 October 2026

முழுமை

1000 நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

1000 நாட்டு மாடுகளுக்குத் தேவையான புல் வளர்க்கப்படுகிறது. 

பசு மாடுகள் பால் தருகின்றன. 

பாலிலிருந்து தயிர் உருவாக்கப்பட்டு அதிலிருந்து வெண்ணெய் எடுக்கப்பட்டு வெண்ணெய் உருக்கப்பட்டு நெய் தயாராகிறது. 

நெய் விற்பனை செய்யப்படுகிறது. 

மாட்டுச் சாணத்துடன் புல் கலக்கப்பட்டு மக்க வைக்கப்பட்டு அதிலிருந்து சி பி ஜி என்னும் பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. 

சி பி ஜி விற்பனை செய்யப்படுகிறது. 

சி பி ஜி உருவான பின் ஸ்லரி கிடைக்கிறது. 

ஸ்லரி காயவைக்கப்பட்டு ஸ்லரி விறகுகளாக ஆக்கப்படுகின்றன. 

ஸ்லரி விறகுகள் எரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.